தண்ணீரை சேமித்தால் மதம் ரூ.3000 - டெல்லி காங்கிரஸ் தேர்தல் அறிவிப்பு
புதுடெல்லி, 

 

70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கு வருகிற பிப்ரவரி 8–ந் தேதி நடைபெற உள்ளது.

டெல்லி காங்கிரஸ் தலைவர் சுபாஷ் சோப்ரா கூறுகையில், தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் குடிநீரை சேமிப்பவர்களுக்கு பணம் வழங்கப்படும் என்றார். அதாவது ஒரு குடும்பத்துக்கு மாதம் 20 ஆயிரம் லிட்டர் குடிநீர் இலவசமாக வழங்கப்படும் என்றும், அவர்கள் குடிநீரை சேமித்தால் லிட்டருக்கு 30 காசுகள் வீதம், அதை சேமிப்பவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக பணம் செலுத்தப்படும் என்றும் அப்போது அவர் கூறினார்.

 

ஒரு குடும்பம் மாதம் 10 ஆயிரம் லிட்டர் குடிநீரை சேமித்தால், அவர்களுக்கு மாதம் ரூ.3,000 ஆயிரம் கிடைக்கும் என்றும், இது தண்ணீரை சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிப்பதாக அமையும் என்றும், இந்த திட்டத்தின் மூலம் டெல்லியில் 25 முதல் 23 சதவீத குடிநீரை சேமிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

 

ஆம் ஆத்மி அரசு தற்போது மாதம் 20 ஆயிரம் லிட்டர் குடிநீரை இலவசமாக வழங்கி வருவதாகவும், ஆனால் தண்ணீரை சேமிப்பதில் கவனம் செலுத்தவில்லை என்றும் சுபாஷ் சோப்ரா குற்றம்சாட்டினார்