மேலும் குறையாத என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்வு : சவரன் ரூ.208 உயர்ந்து ரூ.31,104க்கு விற்பனை

" alt="" aria-hidden="true" />


சென்னை :


சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.208 உயர்ந்து ரூ.31,104க்கு விற்பனை செய்யப்படுகிறது.  ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை மாறிக்கொண்டு வருகிறது. அமெரிக்க டாலரின் விலையில் ஏற்படும் மாற்றமே சர்வதேச தங்கத்தின் விலையை நிர்ணயிக்கிறது. அதை பொருத்து இங்கும் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இந்தியாவில் தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் அதன் விலையை பொறுத்து மாற்றத்துக்கு உள்ளாகிறது. இந்நிலையில் ஜனவரி மாதம் முழுக்க தங்கம் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வந்த நிலையில், பிப்ரவரி மாதத்தில் ஒவ்வொரு நாளும் தங்கம் விலை ஏறுவதும், அடுத்த நாள் பெயரளவுக்கு குறைவதுமான நிலை நீடித்தது.

இந்நிலையில், தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக சரிந்து வந்த நிலையில், இன்று மீண்டும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி, ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு கிராமுக்கு ரூ.26 அதிகரித்து ரூ.3,888க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.208 உயர்ந்து ரூ.31,104க்கு விற்பனையாகிறது.  தங்கத்தின் விலையை போல் வெள்ளியின் விலை இன்று சிறிதளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை கிராமுக்கு 20 காசுகள் அதிகரித்து ரூ.49.60க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, ஒரு கிலோ வெள்ளியின் விலை 200 ரூபாய் அதிகரித்து 49,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.